உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் whatsapp நிறுவனம் பயனர்களுடைய வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஐபோனில் எடுத்த புகைப்படத்தை எந்தவித குறைபாடும் இல்லாமல் செல்போனில் இருக்கும் அதே தரத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பும்படியான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே HD முறையில் பகிரும்படியான அப்டேட் வழங்கப்பட்டிருந்தாலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுடைய தரம் குறைவதாக பயர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தற்போது செல்போனில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களின் தரம் குறையாமல் நண்பர்களுடன் ஷேர் செய்யும்படியான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.