வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக பூங்காவில் கட்டணங்களை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டணம் அதிகரித்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி நுழைவு கட்டணம் ரூ.200-ஆக உயர்த்துவதற்கும், பூங்காவை சுற்றி பார்க்கும் பேட்டரி வாகன கட்டணம் ரூ.150, லயன் சபாரி மற்றும் மான் சபாரி சென்று பார்க்கும் வாகன கட்டணங்கள் ரூ.200, கேமரா மற்றும் வீடியோ கொண்டு செல்வதற்கான கட்டணங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம், அனைத்து வகை கட்டணங்களும் ஓரிரு நாட்களில் உயர்த்தி அரசாணை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.