தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.  இந்நிலையில் ரேஷன் கடைகளில் பயன்பாட்டில் இருந்து வந்த பயோமெட்ரிக் கருவிகள் அனைத்தும் முகாம்களில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாகவே பொதுமக்கள் ரேஷன் கடைகளில் கையெழுத்திட்டு தேவையான ரேசன் பொருட்களை வாங்கி வந்தனர்.

இந்நிலையில் 1000 ரூபாய் உரிமை தொகைக்கான முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளதால் மீண்டும் பயோமெட்ரிக் கருவிகள் ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் எந்த ரேஷன் கடைகளின் மூலமாகவும் ரேஷன் பொருட்களை இனிவரும் நாட்களில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.