போதையில் இருந்து மீண்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சு கூறியுள்ளார். சென்னை கண்ணகி நகரில் போதை மீட்பு மறுவாழ்வு முகாமை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று அதிலிருந்து முழுமையாக மீண்டவர்களுக்கு தற்காலிக அரசு பணி வழங்கப்படும். தீவிரமாக மதுப் பழக்கக்திற்கு ஆளாகி தங்கள் உடலை கெடுத்துக் கொண்டவர்கள்; அதி தீவிரமாக குடிப்பழக்கத்துக்கு ஆளாகி சீரழிந்தவர்கள்.

புதிதாக மதுப்பழக்கத்துக்கு ஆளாகி அதிலிருந்து மீள முடியாமல் இருப்பவர்கள் என எந்த நிலையில் இருந்தாலும் யாரும் கவலைப்பட வேண்டாம். அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி.. நீங்கள் ‘மனம்’ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றார். மதுவை விற்பனை செய்யும் அரசே இப்படியும் சொல்கிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.