வடிவேலுவுக்கு அரசியல் யோகம் அறவே இல்லை என்று நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார். அரசியலில் வடிவேலு கால் வைக்கிற இடமெல்லாம் தோல்விதான் மிஞ்சியது என விமர்சித்த அவர், தனக்கு அரசியல் ராசி இல்லை என முடிவு செய்து வடிவேலுவே அரசியலில் இருந்து விலகியதாகவும் தெரிவித்தார். முன்னதாக அரசியல் என்பதே தனக்கு பழங்கதையாகி விட்டதால் இனி நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என வடிவேலு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.