தென்னிந்திய சினிமா அளவில் பிரமாண்ட இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் ஆறு நாட்களில் உலக அளவில் 621.12 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அட்லி இயக்கிய இந்த திரைப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதையெல்லாம் அடித்து நொறுக்கி வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது. இதுவரை 600 கோடி வசூலித்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக இந்த படம் ஆயிரம் கோடியை கடந்து வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.