தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. நேரு ஸ்டேடியம் உட்பட சில இடங்களை பார்த்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் லிரிக் வீடியோ வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார். அதில் காஷ்மீரில் படமாக்கிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே முதல் சிங்கிள் பாடலான நான் ரெடி தான் வரவா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடல் யூ டியூபில் 126 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.