தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிய படம் “வாரிசு”. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. எனினும் இந்த படம் முதல் நாளில் இந்தியாவில் ரூபாய் 26.17 கோடி வசூல் செய்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 19 கோடி வரை வசூல் செய்தது.

அதன்பின் 2வது நாளில் வாரிசு படத்தின் வசூல் சற்று குறைந்து உள்ளது. அதன்படி 2வது நாள் இந்தியாவில் ரூபாய் 16 கோடி வரை வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால் இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ 42.70 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.