தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் உடன் 2வது முறையாக இணைந்துள்ள “தளபதி 67” படத்தின் அப்டேட் குறித்த கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில் அளித்து இருக்கிறார். அவர் பதில் அளித்ததாவது, இன்னும் 10 நாட்களில் தளபதி 67 அப்டேட் எதிர்பார்க்கலாம். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தீபாவளி வெளியீடாக படம் வருமா என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். அதன்பின் தமிழகம் என்று சொல்ல விரும்புகிறீர்களா? (அ) தமிழ்நாடு என்று சொல்ல விருப்பப்படுகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லோகேஷ் தமிழ்நாடு என்று சொல்லவே நான் விரும்புகிறேன் என்று கூறினார்.