கோவை மாவட்டம் வால்பாறையில் வசிக்கும் பட்டியல் இனைத்தை சேர்ந்த விநாயகம் என்பவர் தன்னுடை குழந்தைக்கு கட்டாய கல்வி ஒதுக்கீட்டில் இடம் வழங்கக்கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட சுற்றளவுக்கு அப்பால் வீடு இருப்பதாக சொல்லி நிராகரித்தார்கள். இந்த நிலையில் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளி இருப்பிடம் தூரம் குறித்த விதிகள் கட்டாயம் இல்லை என்று கூறினார்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடங்கள் காலியாக இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட தொலைவுக்கு அப்பால் இருப்பவர்களையும் சேர்க்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே மனுதாரரின் மகளுக்கு மூன்று வாரத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.