இணையதளம் மூலமாக வங்கி கணக்குகளை இடமாற்றம் செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. வண்டி வாடிக்கையாளர்கள் இணையதளம் மூலம் ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு தங்களுடைய கணக்குகளை மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் கிளைகளுக்கு நேரடியாக சென்று படிவங்களை பூர்த்தி செய்வது போன்ற சிரமம் இருக்காது. வாடிக்கையாளர்கள் iob.in என்ற வங்கியின் வளைதளம் மூலம் தங்கள் கணக்குகளுக்குள் நுழைந்து இந்த வசதியை பயன்படுத்தலாம்.