இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடி ஆகும் என்றும் இதுவரை 97.38 சதவீதம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

அதன் பிறகும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், 2023 ஆம் ஆண்டு இறுதி வரை 97.38 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடி ஆகும் என தெரிவித்துள்ளது.