இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் சம்பளம் இனி அவர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அடிப்படையிலான கட்டண முறைக்கு மாறுவதற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்த அவகாசம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி உடன் முடிவடைந்தது.

சிக்கல்கள் உள்ள இடங்களில் மட்டுமே மத்திய அரசு விதிவிலக்கு அளித்துள்ளது. நாட்டில் 25 புள்ளி 89 கோடி தொழிலாளர்கள் உள்ள நிலையில் 13.48 கோடி பேர் மட்டுமே ஆதார் பதிவை முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே இனி 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஆதார் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் மட்டுமே சம்பள பணம் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.