கடன் தொகையை குறிப்பிட்ட தேதியில் திருப்பி கொடுக்காத வாடிக்கையாளர்களுடைய வீட்டிற்கு சென்று சாக்லேட் அளிக்கும் நூதன திட்டத்தை SBI வங்கி அமல்படுத்த தொடங்கியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலில், கடனை திருப்பிக் கொடுப்பதற்கான மாதாந்திர தவணை காலம் முடிந்த பிறகு அதற்கான தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்களை தொலைபேசி மூலமாக வங்கி தொடர்பு கொண்டு வருகிறது .அத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏற்காமல் இருந்தால் அவர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான அறிகுறிகளாக கருதப்படுகிறது.

அது போன்ற வாடிக்கையாளர்களிடமிருந்து கடன் தொகையை வசூலிப்பதற்கு அவர்களது இல்லத்துக்கோ அலுவலகத்திற்கோ முன் அறிவிப்பு இல்லாமல் நேரில் செல்வதே சிறந்த வழியாகும். அதற்காக சாக்லேட்  உடன்  வாடிக்கையாளர்களுடைய வீட்டிற்கு வசூல் அதிகாரிகளை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.