நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். மருத்துவ கல்லூரிகளில் மொத்த இடங்களில் 50 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றது. இந்த இடங்கள் மற்றும் நிகர் நிலை பல்கலைகள் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகத்தின் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி நடத்துகின்றது.

இந்த வருடத்திற்கான பொதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை https://mcc.nic.in என்ற இணையதளத்தில் நடத்தி வரும் நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன. இதனால் நீட் தேர்வு எழுதிய அனைவரையும் பங்கேற்க செய்து அந்த இடங்களை நிரப்புவதற்காக நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. மூன்றாம் கட்ட கவுன்சிலிங் ஆன்லைனில் பதிவு செய்து பங்கேற்கலாம் எனவும் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.