இந்திய வானிலை மையம் தற்போது செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய மேற்கு, வடமேற்கு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இதையடுத்து நேற்று அது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதைத்தொடர்ந்து இன்று காலை வடமேற்கு திசையில் நகர்ந்து 3km வேகத்தில் ஒடிசாவில் நிலை கொண்டிருக்கிறது. இது பூரிக்கு 40 கிலோமீட்டர் தொலைவிலும் கோபால் பூருக்கு 70 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை ஒடிசாவில் கரையை கடந்து வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு பெய்ய கூடும். சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடும்” என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
