ஆயுள் காப்பீட்டின் மீது லோன் வாங்கியவர்கள் அதனை க்ரெடிட் கார்டு கொண்டு செலுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று IRDAI உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், காப்பீட்டு பாலிசிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட கடன்களை திரும்ப செலுத்தும் முறையாக, கிரெடிட் கார்டை ஏற்றுக்கொள்வதை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த அமைப்பு காப்பீடு நிறுவனங்களை கண்காணிப்பது மட்டுமல்லாமல் சட்ட திட்டங்களையும் வகுக்கிறது. பலர் லோன் எடுத்துவிட்டு அதனை க்ரெடிட் கார்டு மூலம் செலுத்துவது தெரிய வந்துள்ளதால் அதனை ஏற்க வேண்டாம் என்று தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.