இந்தோனேசியாவில் சமூக வலைதளப் பிரபலம் (Influencer) ஒருவர், நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது திருமணமான ஒருவரை கிண்டல் செய்ததற்காகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளம்பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேரலையில் (Live Stream) ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, ஒரு நபரை விளையாட்டாகக் கிண்டல் செய்துள்ளார்.
During a live stream, an Indonesian female influencer made fun of a man who was dining with his wife.
Angered by her comments, the man reacted and assaulted her in front of her online audience. pic.twitter.com/AhmLTyQ4dI
— aka (@akafaceUS) February 26, 2026
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து மிகக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.
அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் கதறித் துடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரு சிறிய கிண்டல் இவ்வளவு பெரிய வன்முறையில் முடிந்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
