மடிக்கணினி (லேப்டாப்), கணினி இறக்குமதியில் எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. மாறாக, கண்காணிப்பு மட்டுமே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மடிக்கணினி, கணினி இறக்குமதி மீது நவம்பா் 1ம் தேதிமுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்த நிலையில், தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா தற்போது ஆண்டுக்கு ரூ. 58,000 கோடி முதல் ரூ.66,000 கோடி மதிப்பிலான மடிக்கணினி, கணினி, செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருள்களை இறக்குமதி செய்து வருகிறது.