மத்திய அரசு சில வருடங்களில் இரட்டைப்ப வருமானம் தரக்கூடிய அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட தனிநபர் முதலீடு செய்யலாம். தனிநபரின் பங்களிப்பு மற்றும் வயதை பொறுத்து ஆயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை குறைந்தபட்ச ஓய்வூதியமாக பெற முடியும். இதில் ஒவ்வொரு மாதமும் குடிமக்கள் 210 முதலீடு செய்து வந்தால் 42 வருடங்களுக்கு பின்னர் 60000 ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். அதாவது வாடிக்கையாளர் தனது 18 வயதில் ஒவ்வொரு மாதமும் 210 முதலீடு செய்தால் 42வது ஆண்டில் மொத்தம் இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து 220 ரூபாய் சேமிக்க முடியும்.

இந்த திட்டத்தில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள் வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு நேரடியாக சென்ற இணைய முடியும். ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய இயலாதவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் மூலமாக சந்தா செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே வயதான காலத்தில் ஓய்வூதியம் பெற விருப்பமுள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதில் 18 வயதில் சேர்ப்பவர்கள் மாதம்தோறும் 210 ரூபாய் கட்டி வந்தால் 60 வயது நிரம்பியதும் மாதம் 5 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். இதனைப் போலவே 40 வயதில் சேர்ப்பவர்கள் மாதம் 1454 ரூபாய் செலுத்தினால் டென்ஷனாக ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.