பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஜனனி. இலங்கையை சேர்ந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைத்த நிலையில் சமீபத்தில் விஜய் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் மாலையும் கழுத்துமாக இவர் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது அடுத்த படத்திற்கான ஷூட்டிங் என கூறும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.