மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து முன் யானை திடீரென்று கீழே படுத்துக்கொண்ட வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பேருந்து மலைப் பாதையில் செல்கிறது. வளைவுப்பகுதி என்பதால் மிகவும் மெதுவாக செல்கிறது.

அப்போது யானை ஒன்று பேருந்திற்கு அருகே வந்து நிற்கிறது. இதனால் பேருந்து ஓட்டுநரும், பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பேருந்துக்கு சற்று தொலைவில் முன்னால் நின்ற யானை திடீரென்று சாலையில் காலை நீட்டி படுத்துக்கொண்டது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.