தற்போது ராஜ நாகப்பாம்பு வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரும்பு பைப்பில் ராஜ நாகம் ஒன்று அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் ஒரு நபர் அந்த குழாயில் இருந்த நாகப் பாம்பை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது, ​​திடீரென்று அவரை தாக்கியது. இந்த பாம்பை பார்த்து அப்பகுதி மக்கள் பயத்துடன் கலைந்து சென்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.