ரேஷன் கடைகள் தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றது. நாட்டில் 80 கோடி மக்களுக்கு சேவை செய்யும் ஐந்தரை லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ளன. இதனால் வரும் நாட்களில் அமேசான் மற்றும் பிலிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய சூழல் இருக்கும். அரசு ரேஷன் கடைகள் மூலமாக தரமான அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முடியுமா என்பது குறித்து மத்திய அரசு தற்போது ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.