பொதுவாக இந்தியாவில் உறவினர் முறைகளுக்குள் திருமணம் செய்வது வழக்கமாக இருந்தது. அத்தை மகன், மாமன் மகள் என்ற உறவு முறைப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு இது தொடர்பாக புதிய சிவில் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது .

அதாவது இனி உத்தரகாண்ட் மாநிலத்தில் அத்தை மகள், மாமன் மகன் முறை உறவில் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தாலும் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் பொது சிவில் சட்டத்தில் தடை விதிக்கப்பட்ட பந்தமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.