அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவிலை பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற இடமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கோவிலின் சுற்று வட்டார பகுதிகளில் பக்தர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி செல்வதை தடுக்க புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலை கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்தால் ஐந்து ரூபாய் வழங்கப்படும் என்ற புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்க முடியும்.