இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் இலவசமாகவும் மலிவு விலையிலும் ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் ரேஷன் கார்டு என்பது வழங்கப்படுகிறது. தற்போது ரேஷன் கார்டை பெறுவதற்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தகுதி பெற்றோருக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே ரேஷன் கார்டு பெரும் நடைமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.

மேலும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களையும் ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் உள்ளீடு செய்யலாம். அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று மொழியை தேர்ந்தெடுத்து ஊரின் பெயர் மற்றும் வட்டம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். அதன்பிறகு உங்களுடைய வருமானத்தின் அடிப்படையில் ரேஷன் கார்டு தேர்வு செய்து மொபைல் எண், வங்கி கணக்கு எண் மற்றும் வாக்காளர் ஐடி உள்ளிட்டவற்றை நிரப்பி இறுதியாக குடும்ப உறுப்பினரின் பெயர்களையும் அவர்களுடைய விவரங்களையும் உள்ளிட்டு படிவத்தை சமர்ப்பித்தால் உங்களது ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்கள் பெயர் சேர்க்கப்படும்.