இந்தியாவில் மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் ரேஷன் அட்டைகள் மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றது போல மாதம்தோறும் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேஷன் கார்டுகள் தகுதியற்றதாக இருந்தால் அவை நீக்கம் செய்யப்படும் என்று புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ள நபருக்கு வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டுகள் இருக்கக் கூடாது எனவும் குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படும் ரேஷன் அட்டைகளில் உங்களுடைய வருமானத்திற்கு எந்த வகை ரேஷன் கார்டு என்பது தீர்மானித்து வழங்கப்படும் நிலையில் முறைகேடுகளில் ஈடுபடும்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கான ரேஷன் அட்டை தகுதியற்றதாக ரத்து செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களுக்கான ஆதார் எண், வங்கி கணக்கு, மொபைல் எண் மற்றும் வாக்காளர் ஐடி போன்ற அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும். அதனைப் போலவே அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையும் அப்டேட் செய்ய வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.