
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு நடைமுறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கைவிரல் ரேகை சரிபார்ப்பு குறித்து மக்களிடையே குழப்பம் நிலவி வரும் சூழலில் இது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படாது.
குடும்ப அட்டைகள் ஏதும் ரத்துசெய்யப்படாது.வெள்ளைத்தாளில் சுயவிவரங்கள் ஏதும் தரவேண்டியதில்லை. யாரும் அச்சப்பட வேண்டாம். குடும்ப அட்டைதாரர்கள் அவரவர் வசதிக்கேற்ப அட்டையை புதுப்பித்துக்கொள்ளலாம்.