பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு விலையில்லா சர்க்கரை, அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாக வந்த புகாரை தொடர்ந்து தகுதியற்ற பலரின் பெயரை அரசு நீக்கியது. இவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது நீக்கப்பட்டவர்களும் இலவச பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் அட்டகார்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.