தேர்தலுக்குப் பிறகு ரீசார்ஜ் கட்டணத்தை 15 முதல் 17 சதவீதம் உயர்ந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இந்தியாவில் தற்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளன. அதே சமயம் பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறுவனமும் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ரீசார்ஜ் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.