தமிழகத்தில் சாமானிய மக்களும் குறைந்த விலையில் மருந்துகளைப் பெற வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட ‘முதல்வர் மருந்தகங்கள்’ திட்டம், தற்போது பெண்களுக்கான ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உருவெடுக்கப் போகிறது.

இந்த மருந்தகங்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள தமிழக அரசு, இனி அங்கு மலிவு விலையில் (மானிய விலையில்) சானிட்டரி நாப்கின்கள் கிடைப்பதையும் உறுதி செய்யவுள்ளது.

பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், மாதவிடாய் காலங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தரம் குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்து வரும் நிலையில், தற்போது நாப்கின்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.