வெள்ள நிவாரணத்தொகை 6000 ரூபாய்  17ஆம் தேதி முதல் கொடுக்கப்பட்டு 5 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது..

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக 6000 ரூபாய் அறிவிக்கப்பட்டு, தற்போது டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று டோக்கன்கள் விநியோகம் தொடங்கிய நிலையில் இன்றைய தினமும் தொடங்கி, விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் நாளையும் டோக்கன்கள் வினியோகம்  முழுமையாக விநியோகிக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து  நிவாரணத் தொகை 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிவாரணத் தொகையானது வரும் 17ஆம் தேதி முதல் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டு 3 நாட்களுக்குள் கொடுத்து முடிக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் அதிகபட்சமாக 5 நாட்களுக்குள் நிவாரணத் தொகையானது முழுவதும் கொடுத்து முடிக்கப்படும் என்று துறை சார்பில் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மட்டுமல்லாமல் குறிப்பாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 6000 அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், எப்பொழுது அந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் என்ற கேள்வியானது தொடர்ந்து இருந்தது.

அந்த வகையில் நாளைக்குள் அந்த டோக்கன்கள் விநியோகம் நிறைவடைந்து வரக்கூடிய 17ஆம் தேதி நிவாரணத்தொகையானது வழங்கப்பட இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த தொகையானது கொடுக்க ஆரம்பிக்கப்பட்டு அதிகபட்சமாக 5 நாட்களுக்குள் நிவாரணத்தொகை முழுவதும் கொடுத்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.