இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.  இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்  அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனம் செய்திருந்த முதலீடுகள் முதல் முறையாக நெகட்டிவ்க்கு சென்றிருக்கிறது.

அதாவது எல்ஐசி இதுவரை சிறுக சிறுக முதலீடு செய்திருந்தவை, அதானியின் இத்தனை நாள் வீழ்ச்சிக்கு பின்னரும் லாபத்திலேயே இருந்து வந்தது. இன்று முதல்முறையாக அவை நஷ்டத்திற்கு சென்றிருக்கின்றன. ஜனவரியில் 70,000 கோடியாக இருந்த மொத்த முதலீடு தற்போது 33,600 கோடியாக குறைந்துள்ளது.