ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் ப்ரைமா 4ஜி JioPhone Prima 4G என்ற புதிய 4ஜி மொபைல் போனை அறிமுகப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மொபைலில்  ரூ.2,599க்கும் கிடைக்கும் வாட்ஸ்அப், யூ-ட்யூப் மற்றும் பிற செயலிகளை பயன்படுத்த முடியும்.

மேலும் JioPhone Prima 4G ஆனது 2.4-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் மேலே ஒரு இயர்பீஸ் மற்றும் மேல் வலது விளிம்பில் லேன்யார்டு லூப் ஆகியவற்றுடன் வருகிறது. இது 1800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.