மோமோஸ் கடையில் உதவியாளராக சேர்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்ற விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிய வருகிறது. X தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வரும் இந்த விளம்பர போஸ்டரில் மோமோஸ் கடை உதவியாளர் பணிக்கு 25 ஆயிரம் சம்பளம் என்று ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது. இது எந்த ஊரில் உள்ள தலையில் எழுதப்பட்டிருந்தது என்ற விவரம் தெரியவில்லை. இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து இந்த கடை எங்கே உள்ளது என கூறுங்கள் நான் வேலைக்கு சேருகிறேன் என்று காமெடியாக பதிவிட்டு வருகிறார்கள்.