சென்னையில் பாஜக கட்சியின் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்த வருடம் பட்ஜெட்டில் 12 லட்சம் ரூபாய் வரையில் வருமானவரி விலக்கு அறிவிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் இதன் மூலம் 60 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். தமிழக மாணவர்கள் தாய்மொழியில் பின் தங்கியுள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழ் மொழியை சொல்லி அரசியல் செய்யும் திமுக இதற்காக வெட்கப்பட வேண்டும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கு அனைத்து மாநிலங்களிலும் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்.

இதற்கான முயற்சிகளை திமுக மேற்கொண்டால் மத்திய அரசிடம் இருந்து பாஜக நிதி பெற்று கொடுக்கும். தமிழ்நாட்டில் அடுத்து வரும் 2026 தேர்தலில் பாஜக மட்டும் வெற்றி பெற்றால் நாட்டிலேயே அதிகமான அளவு மகளிர் உரிமை தொகை  வழங்கப்படுகிறது. இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் அங்கு அதிகபட்சமாக 2500 ரூபாய் வரையில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. இதேபோன்று தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அதிகபட்ச மகளிர் தொகை வழங்கப்படும் என்று கூறினார்.