நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.   செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 20,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வைத்து ஷாப்பிங், பெட்ரோல் செலவுகளை செய்துவருகின்றனர். மறுபுறம்புத்திசாலித்தனமாக யோசித்த சிலரோ வியாபாரத்தை பெருக்கியுள்ளனர். 2000 நோட்டை வைத்து கறி வாங்கினால் 2000க்கு ரூ.2100 மதிப்புள்ள கறி கிடைக்கும் என கடைக்காரர் ஒருவர் விளம்பரம் செய்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.