அமலாக்கத்துறை வழங்கிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.35 கோடி சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீஸை எதிர்த்து அவர் தொடர்ந்த சட்டப் போராட்டத்திற்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தச் சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையும் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது