இன்று முதல் அடுத்த 12 மாதங்களுக்கு ChatGPT GO-வை இலவசமாகப் பெறுங்கள் என OpenAI நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சிறப்புச் சலுகையைப் பெறுவதற்கு, நீங்கள் ChatGPT-யின் முகப்புப் பக்கத்திற்கு (Homepage) செல்ல வேண்டும். அங்கு, மேலே உள்ள ‘Upgrade for Free’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யுங்கள். அடுத்து, ‘Go (Special Offer)’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இந்தச் சலுகையைப் பெற, முதலில் உங்களிடம் இருந்து ரூ. 2 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்தக் கட்டணத்தைச் செலுத்தியவுடன், உங்களுக்கு அடுத்த 12 மாதங்களுக்கு ChatGPT GO இலவசமாகக் கிடைக்கும்.
இந்தச் செயல்முறையை முடித்தப் பிறகு, உங்களது வங்கிக் கணக்கில் இருந்து தானாகப் பணம் எடுப்பதைத் (Auto Pay) தவிர்க்க, மறக்காமல் Auto Pay ஆப்ஷனை ‘Off’ செய்துவிடுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட காலச் சலுகை என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
