பொதுவாகவே கார் வாங்கும் பலரும் பேன்சி நம்பர் பிளேட் வாங்க பல லட்சம் ரூபாய் செலவு செய்வதை அறிந்திருப்போம். அதன்படி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கைராதாபாத் RTO அலுவலகத்தில் 9999 என்ற எண் கொண்ட பேன்சி நம்பர் பிளேட் சுமார் 19 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 0001 என்ற நம்பர் பிளேட் 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. அடுத்ததாக 0009 என்ற எண் கொண்ட நம்பர் பிளேட் சுமார் 6 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. அதனைப் போலவே 0006 என்ற எண் கொண்ட நம்பர் பிளேட் 2 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.