டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி-தௌசா-லால்சோட் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார் தெளசாவில் மொத்தம் 18,100 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

ராஜஸ்தான் மாநிலம் தெளசாவில் நடைபெறும் விழாவில் விரைவுச் சாலையின் முதல் பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அதன்படி ரூபாய் 12,150 கோடியில் அமைக்கப்படும் விரைவு சாலையில் 246 கிலோ மீட்டர் தொலைவிலான முதல் பகுதி திறக்கப்பட்டுள்ளது. அதோடு தௌசாவில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். புதிய சாலையால் டெல்லி – ஜெய்ப்பூருக்கு செல்லும் பயண நேரம் 5 மணியிலிருந்து 3.5  மணி நேரமாக குறையும் 1,368 கிலோமீட்டர் தொலைவிற்கு நாட்டிலேயே மிக நீளமான அதிவிரைவு சாலையாக டெல்லி – மும்பை சாலை அமைகிறது.

மேலும் பிரதமர் மோடி ரூபாய் 5,940 கோடி மதிப்பில் 247 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ. 2000 கோடி மதிப்பில் பண்டிகுய் – ஜெய்ப்பூர் வரை 67 கிலோ மீட்டர் நீளத்தில் 4 வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல ரூ 3,775 கோடி மதிப்பில் கோட்புட்லி – பரோடானியோ வரை 6 வழிச்சாலை திட்டத்திற்கும், 150 கோடி மதிப்பில் லால்சோட் -கரோலி பகுதியில் இரு வழி அவசர நிறுத்த பாதைக்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.