கேரள மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்த சமீக்ஷா என்ற திருநங்கை பணம் முதலீடு செய்து தன்னுடைய நண்பர்களின் உதவியோடு இரவு நேர உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகம் நள்ளிரவு ஒரு மணி முதல் காலை 7 மணி வரை செயல்படும். இந்த இரவு நேர உணவகத்தில் டீ மற்றும் தின்பண்டங்கள் போன்றவைகளும் விற்பனை செய்யப்படும் நிலையில் இரவு நேர பயணிகளுக்கு இந்த உணவகம் ஒரு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.

இரவு நேரம் ரோந்து பணியில் செல்லும் காவலர்களும் திருநங்கைகள் நடத்தும் உணவகத்தில் வந்து சாப்பிடுவதால் அவர்கள் மீதான மரியாதை மக்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் பட்டதாரியான சமீக்ஷா என்ற திருநங்கையுடன் சேர்ந்து பூர்வி, வைஷ்ணவி, சந்தனா ஆகியோர் இணைந்து இரவு நேர உணவகத்தை நடத்தி வருகிறார்கள். இவர்களை பலரும் பாராட்டி வருகிறார்கள்.