அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே படங்களில் நடித்துக்கொண்டே உலகம் முழுவதும் பைக்கில் பயணம் மேற்கொண்டு வருகிறார் அஜித். அண்மையில் அண்டை நாடுகளான நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கும் பைக் ரைடு சென்றார். அது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகியது.

சில நாட்களுக்கு முன்பு ஏகே மோட்டோ ரைடு எனும் பைக் சுற்றுலா நிறுவனம் ஒன்றை தொடங்குவதாக அறிவித்தார் அஜித். இந்நிலையில் தன்னுடன் சேர்ந்து பைக் ரெய்டு செய்து வரும் குழுவினர்களில் ஒருவரான சுகத் என்பவருக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை பரிசாக கொடுத்து உள்ளார் அஜித். தன் பைக் ரைடுக்கு சரியாக திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருவது சுகத் தான் என்பதால் அவரை பாராட்டி இந்த பரிசை கொடுத்திருக்கிறார் அஜித்.