வெற்றிமாறன் டைரக்டு செய்த விடுதலை படத்தின் 2 பாகங்களிலும் கதையின் நாயகனாக சூரி  நடித்துள்ளார். இதையடுத்து சூரி பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள கொட்டுக்காளி என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார்.

அதன்பின் துரை செந்தில்குமார் இயக்கத்திலும், இன்னும் சில படங்களிலும் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் சூரி. இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருக்கும் சூரி, அங்குள்ள சிப் லைனில் சாகச பயணம் செய்து உள்ளார். அதுகுறித்த வீடியோவை பகிர்ந்து தன்னம்பிக்கை, துணிச்சல், உழைப்பு, உள்ளிட்டவற்றை பொறுத்துதான் உங்களது மகிழ்ச்சி என சூரி தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Actor Soori (@soorimuthuchamy)