செலவுகளை சமாளிக்கும் விதமாக நடப்பு 2022-23 நிதி ஆண்டில் 11.8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டது. இது 14. 21 லட்சம் கோடி ரூபாயாக திருத்தப்பட்டது. இந்த நிலையில் 2023-24ம் ஆண்டில் பத்திரங்கள் மூலம் ரூ. 15.4 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேதியிட்ட பத்திரங்கள் மூலமாக ரூ.11.8 லட்சம் கோடியும், மீதமுள்ளவை சிறு சேமிப்பு மூலமாகவும் பெறப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் ரூ.14.21 லட்சம் கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 27 நிலவரப்படி ரூ.12.93 லட்சம் கோடி பெறப்பட்டுள்ளது என்றார்.