இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் பத்தாயிரம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன. மீதமுள்ள பத்தாயிரம் கோடி ரூபாய் நோட்டுகளும் திரும்ப பெறப்படும் அல்லது விரைவில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது தனிநபர் ரிசர்வ் வங்கிகளில் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.