உத்திரபிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் தேர்தல் அறிக்கையின் போது ஆண்டுக்கு இரண்டு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி திட்டம் குறித்த தேவையான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆண்டிற்கு இரண்டு முறை வீதம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தீபாவளி பண்டிகை மற்றும் ஹோலி பண்டிகையின் போது இலவச சிலிண்டர் தொகை பொது மக்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கோடியை 75 லட்சம் பேர் கேஸ் சிலிண்டர் எரிவாயு பெற்றுள்ள நிலையில் இலவச கேஸ் சிலிண்டர் திட்டம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.