மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அகல விலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது வரை மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவீதம் அடிப்படையில் அகலவிலைப்படி பலன்களை பெற்று வரும் இடையில் 46 சதவீத அகலவிலைப்படியை ஜூலை ஒன்றாம் தேதி நிலவரப்படி தற்போது பெற உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ஒடிசா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்க உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஜூலை மாதத்திற்கான அகல விலைப்படி உயர்வு எப்போது வழங்கப்படும் என அரசு ஊழியர்களின் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.