தமிழக அரசு தற்போது இளைஞர்கள் போதைப்பொருட்களை நாடுவதை குறைப்பதற்காக போதை இல்லா தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.. இதன் ஒரு பகுதியாக தற்போது இந்த தலைப்பில் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து அனுப்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது போதை இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் ரீல்ஸ், மீம்ஸ் மற்றும் போஸ்டர் டிசைன் செய்யும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் தாங்கள் எடுக்கும் ரீல்ஸ் வீடியோ போன்றவைகளை [email protected] என்ற மெயில் ஐடிக்கு் வேண்டும். மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
